×

கொரோனாவால் நலிவடைந்துள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பேருந்து மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சமூக ஊடகவியலாளர்கள் பயணம் மேற்கொள்ளும் வாகனத்தை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சுற்றுலா துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், சுற்றுலா துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் அவர் அளித்த பேட்டி:சமூக வலைதளங்களில் சுற்றுலா துறையில் ஆர்வமுள்ள 10 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் அறியப்படாத ஒவ்வொரு சுற்றுலாதலங்களுக்கும் சென்று அந்த இடத்தின் வரலாற்றை புகைப்படங்கள், வீடியோக்கள் மூலமாக தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர உள்ளனர்.

இன்று முதல் அக்டோபர் 6ம் தேதி வரை இந்த குழு பயணம் மேற்கொள்ள உள்ளது. மக்கள் அறியாத சுற்றுலாத் தலங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இந்த பயணத்தின் நோக்கம். மேலும், கொரோனாவால் சுற்றுலாத்தலங்கள் நலிவடைந்துள்ளது. எனவே, அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கீழடியை சுற்றுலா தலமாக மாற்ற ஏற்கனவே முதலமைச்சர் நிதி அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறைக்கென உள்ள செயலியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Minister ,Mathivendan , Measures to improve the tourist sites weakened by the corona: Minister Mathivendan information
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...