அனைத்துக்கட்சி கூட்டம்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறி விட்டது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும், இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதைக் காட்டவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து அனைத்துக்கட்சித் தலைவர்கள் குழுவுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்.

Related Stories:

More
>