ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: குமரி. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: 20 ஆயிரம் ஏக்கர் வாழை நாசம்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வயல்கள் நீரில் மூழ்கின. சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை வங்க கடலில் உருவான குலாப் புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மதியம் ெதாடங்கி விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான கோதையாறு, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு போன்றவை கரைபுரண்டு ஓடுகின்றன. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.37 அடியாக இருந்தது. அணைக்கு 2,572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து நேற்று காலை 3294 கனஅடி தண்ணீர் மதகு வழியாக திறந்து விடப்பட்டது.

பேச்சிப்பாறை அணையில் மறுகால் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறும் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ேகாதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திற்பரப்பு தடுப்பணை நிரம்பி வழிகிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கீரிப்பாறையில் இருந்து அருகில் உள்ள தொழிலாளர் காலனிக்கு செல்ல சாலை உள்ளது. ெபாது மக்கள் ேபாக்குவரத்துக்காக அமைத்திருந்த தற்காலிக பாலம் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. குளச்சல் பகுதியில் விடியவிடிய சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கடல் பகுதியிலும் பலமான காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளித்துறைக்கும் வெட்டுவெந்நிக்கும் இடையே உள்ள குறுக்கு சாலை மூடப்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.

நாகர்கோவிலில் புளியடி சாலை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. ஆசாரிபள்ளம் குருகுலம் சாலையில் உள்ள ஷாலோம் நகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தேரூர் பகுதியில் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் நேற்று காலை முதல் திடீர் என சூறை காற்று வீசி வருகிறது. இந்த காற்றினால் திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர், ராஜபுதூர் மற்றும் சுற்று புறபகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமாயின.

Related Stories:

More
>