பெண் அதிகாரி பலாத்காரம்: விமான படை அதிகாரிக்கு செப்.30 வரை காவல் நீடிப்பு'

கோவை: கோவை ரெட்பீல்டில் விமான படை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் டெல்லியை சேர்ந்த 28 வயதான பெண் அதிகாரி மற்றும் சில அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பயிற்சி பெற்று வந்தனர். காலில் காயம் ஏற்பட்டதால் ஓய்வு எடுத்த பெண் அதிகாரியை பயிற்சிக்காக வந்திருந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித்தேஸ் (30) என்பவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து புகார் அளித்தார்.

இது தொடர்பாக கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அமித்தேைஸ கைது செய்து உடுமலை சிறையில் அடைத்தனர். இந்நிலையில்,  கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில்  அமித்தேஸ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி, லெப்டினென்ட் அமித்தேசுக்கு வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமித்தேஸ் உடுமலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

More