ஸ்டெர்லைட் ஆலை கழிவை அகற்ற அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தினர்,  ஆக்சிஜன் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.  இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, தூத்துக்குடி கலெக்டரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், ‘‘மருத்துவ அவசர நிலை காரணத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது. மூலப்பொருட்களை அகற்றிக் கொள்ள அனுமதி கோரியது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்புக்குழு ஒப்புதல் தர பரிந்துரைக்கவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதிக்கவில்லை. இந்த சூழலில், கழிவுகள் மற்றும் மூலப்பொருட்களை அகற்றிக் கொள்ள அனுமதிக்க முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories:

More
>