சென்னையில் சாலைக்கு நாகேஷ் பெயர்: கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை:  நடிகர் கமல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் புகழப்பட்டவர். சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர். இந்த மகத்தான நடிகரின் கலை பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரை சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினை தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: