திருப்பதி கோயிலில் நயன்தாரா தரிசனம்'

சென்னை: திருப்பதி கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், இந்தியில் லயன், மலையாளத்தில் கோல்ட் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்தது.

அதை இப்போதுதான் நயன்தாரா அறிவித்து இருந்தார். இந்நிலையில் விக்‌னேஷ் சிவனுடன் சேர்ந்து அவர் நேற்று திருப்பதி கோயிலுக்கு சென்றார். ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் கூடிவிட்டனர். அவர்கள் நயன்தாராவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.

Related Stories:

More