ராட் லேவர் கோப்பை; ஐரோப்பா சாம்பியன்

பாஸ்டன்: ராட் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக அணியை 14-1 என்ற கணக்கில் வீழ்த்திய ஐரோப்பிய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.  அமெரிக்காவின்  பாஸ்டன் நகரில் கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்து வந்த இத்தொடருக்கான ஐரோப்பிய அணியில்  முன்னாள் வீரர் போர்க் (ஸ்வீடன்) தலைமையில் மெத்வதேவ் (ரஷ்யா),  சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ருப்லேவ் (ரஷ்யா), பெரட்டினி (இத்தாலி), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். உலக அணியில் முன்னாள் வீரர் ஜான் மெக்கன்ரோ (அமெரிக்கா) தலைமையில்   பெலிக் அகுர், ஷபோவலோவ் (கனடா), ஷ்வார்ட்ஸ்மன் (அர்ஜென்டினா), ஒபெல்கா, ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா), கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் களமிறங்கினர்.

ஒற்றையர், இரட்டையர் என மொத்தம் 15 ஆட்டங்கள் நடந்ததில், 14 ஆட்டங்களில் வென்ற ஐரோப்பிய அணி இந்த முறையும் கோப்பையை வசப்படுத்தியது. உலக தரவரிசையின்படி  ஐரோப்பிய அணியில் 2 முதல் 10 ரேங்க் வரை உள்ளவர்களும், உலக  அணியில் 11 - 22  ரேங்க் உள்ளவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டுக்கான லாவர் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறும்.

Related Stories:

>