×

பாதுகாவலர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார்: பாஜ தலைவர் திலிப் கோஷூக்கு எதிராக திரிணாமுல் தொண்டர்கள் முழக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், பவானிப்பூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வராக இருக்கும் திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடுகின்றார். அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்றால் இந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அவசியமாகும். மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜ சார்பில் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகின்றார். இதனை தொடர்ந்து பவானிப்பூர் தொகுதியில் பாஜ தலைவர் திலிப் கோஷ்  நேற்று கடைசி நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கொரோனா தடுப்பூசி முகாமிற்குள் பாஜ தலைவர் திலீப்  கோஷ் சென்றபோது திரிணாமுல் தொண்டர்கள் அவரை பிடித்து தள்ளியதாகவும், அவரை திரும்பி போ என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதாகவும் பாஜ குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. திலீப் கோஷின் பாதுகாவலர்கள் பொதுமக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பதிவில்,‘‘பட்டபகலில் பொதுவெளியில் பொதுமக்களை துப்பாக்கியால் எப்படி குறிவைக்கலாம். என குறிப்பிட்டுள்ளது.

Tags : Trinamool ,BJP ,Dilip Ghosh , BJP leader Dilip Ghosh, complaint
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றியை...