×

கொரோனா பாதித்த போது டிரம்ப்புக்கு தரப்பட்ட மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு தரப்பட்ட காக்டெயில் ஆன்டிபாடி மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், அதிபர் தேர்தலுக்கு முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கேஸிர்விர்மாப், இம்டெவிமாப் ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக கலந்து ஆன்டிபாடி காக்டெயில் மருந்து தரப்பட்டது. இந்த மருந்து, நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் செயற்கை ஆன்டிபாடிகளை உருவாக்கும் மோனோக்ளோனல் ஆன்டிபாடி வகை மருந்தாகும். இந்த மருந்தை எடுத்துக் கொண்ட டிரம்ப் விரைவில் குணமடைந்தார்.

இதனால் இந்தியாவிலும் இந்த மருந்துக்கு கடந்த மே மாதம் அவசரகால அனுமதி தரப்பட்டது. இதன் ஒரு டோஸ் விலை சுமார் 60,000 ஆகும். இந்நிலையில், இம்மருத்துக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டும் உலக சுகாதார நிறுவனத்தின் மருந்து பட்டியலில் காக்டெயில் ஆன்டிபாடி மருந்தும் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் இனி இம்மருந்தின் தேவை அதிகரிக்கும் என அம்மருந்தை தயாரிக்கும் ரோச் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags : World Health Organization ,Trump , Corona, World Health Organization
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...