×

தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு

கராச்சி: பாகிஸ்தான் நாட்டை தோற்றுவித்தவரும், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான முகமது அலி ஜின்னாவின் சிலையை, தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் போல வந்து வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோர நகரமான குவாடர் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பகுதி என்பதால் அவரது சிலை இங்குள்ள கடற்கரை சாலையில் கடந்த ஜூன் மாதம் நிறுவப்பட்டது.

இந்நிலையில், தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் போன்று வந்து அப்பகுதியை சுற்றிப்பார்ப்பது போல் சிலைக்கு அடியில் வெடிகுண்டு வைத்தனர். அந்த குண்டு வெடித்ததில் சிலை சேதமடைந்தது. இந்த தீவிரவாத செயலுக்கு ‘பலுச் விடுதலை முன்னணி’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பாப்கார் பலோச் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். குவாடர் துணை ஆணையர் அப்துல் கபீர் தெரிவிக்கையில், `இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிலைக்கு வெடிகுண்டு வைத்தவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் முடியும்,’ என்று கூறினார்.

Tags : Jinnah ,Pakistan , Extremists
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...