திருச்சி அருகே இமயமலை சாரலில் பூக்கும் பிரம்ம கமலம்: மக்கள் தரிசனம்

தா.பேட்டை: தா.பேட்டையில் ஒருவரது வீட்டில் வளர்ந்துள்ள,இமயமலை சாரலில் வளரும் தன்மையுள்ள செடியில் இருந்து பிரம்ம கமலம் எனும் மலர் நேற்று  மலர்ந்தது. இதனை வியப்புடன் பார்த்த மக்கள் தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் தா.பேட்டை வடுகர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இயற்கை ஆர்வலரான இவரது வீட்டில் இமயமலைச் சாரலில் வளரும் தன்மையுள்ள செடி ஒன்றையும் வளர்த்து வருகிறார். இச்செடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பிரம்ம கமலம் எனும் அழகான பூ மலர்ந்து.

இந்த மலர் அதிகாலை உதிர்ந்து விடும் தன்மை உடையது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மையுள்ள இந்த மலர் இறைவனுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது. இச்செடியின் இலையிலிருந்து நீண்டு வளரும் காம்பில் இருந்து வெளிப்படும் மலர் தூய வெண்மை நிறத்தில் அழகுடன் காட்சியளிக்கிறது. பிரம்ம கமலம் மலர் பூத்துள்ளதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மலரை தரிசித்து சென்றனர். வீட்டிலுள்ளோர் பிரம்ம கமலம் மலருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

Related Stories:

More