குமரி ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குலசேகரம்: புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்று மதியம் ெதாடங்கி விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.  இதனால் சாலைகள் மற்றும்  தெருக்களில் வெள்ளம் ஆறாக பாய்ந்தது. மழைகளில் இருந்த நீரோடிகள் காரணமாக ஆறுகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவு முழுவதும் மழை பெய்த்தால் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வந்ததை யடுத்து, மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான கோதையாறு,  பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு போன்றவையும் கரைபுரண்டு ஓடுகிறது.

பேச்சிப்பாறை  அணைக்கு மழை காரணமாக அதிகளவு தண்ணீர் வந்த வண்ணம் இருந்தது. இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 44.37 அடியாக இருந்தது. அணைக்கு  2,572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு தண்ணீர் தொடர்ச்சியாக அதிகரிப்பால் அணையில் இருந்து முதலில் 1000 கனஅடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 3294 கனஅடி தண்ணீர் மதகு வழியாக திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து பாசன  கால்வாய்கள் வழியாக 227 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையில்  மறுகால் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறும் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்கனவே  மழைநீரும், அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேர்ந்து ஆற்றில் வருதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ேகாதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திறப்பு தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதுபோன்று திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்தநிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம்  இன்று காலை 59.67 கனஅடி இருந்தது. அணைக்கு 1847 கன தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மலைகளில் இருந்து  தண்ணீர் அதிகளவு வருவதால் பரளியாற்றில் அதிகளவு தண்ணீர் பெருகியுள்ளது.  இதனால் பரளியாற்றி குறுக்கே உள்ள அருவிக்கரை தடுப்பணை நிரம்பி அணைகளை  மூழ்கடித்து பாய்கிறது. அருவிக்கரை பகுதிகளில் கலங்கிய நிலையில் தண்ணீர்  பாறைகளுக்கு இடையே சீறிப்பாயும் காட்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனை ஏராளமானோர் பார்த்து ரசித்து சென்றனர். பரளியாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், மாத்தூர்  தொட்டிபாலத்தின் அடிப்பகுதி சப்பாத்து பாலத்திலும்  தண்ணீர் மூழ்கியபடி செல்கிறது.

இதேபோன்று சிற்றார் 1 அணையில் நீர்மட்டம் இன்று  15.91 அடியாக உள்ளது. அணைக்கு 192 அடி கனஅடி வந்து கொண்டிருந்தது. இதுபோல் சிற்றார்2 அணையில் நீர்மட்டம் 16  அடியாக உள்ளது. அணைக்கு 278 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்  மழை காரணமாக சிற்றார்1, சிற்றார் 2, பெருஞ்சாணி ஆகிய 3  அணைகளில் இருந்தும்  பாசனத்திற்கு திறக்கும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் மறுகால் திறக்கப்பட்டுள்ளதாலும், கோதையாறு, பரளியாறு ஆகிய ஆறுகளில் அதிகளவு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

இதனால் குழித்துறை  தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ளது. மேலும் பால் வெட்டும் தொழிலும் முற்றிலும் முடங்கியுள்ளது.

Related Stories:

More
>