×

உலக சுற்றுலா தினம் - 2021 முன்னிட்டு 'தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம்'நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன்!!

சென்னை : உலக சுற்றுலா தினம் - 2021 முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம் (discover Tamilnadu) நிகழ்ச்சியை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் துவக்கி வைத்து ‘ரேடியோ மிர்ச்சி’ நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுற்றுலாத் துறையில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டில் புதிய முயற்சிகளை தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுலா தினம் உலக நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 27ஆம் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுலா அமைப்பு 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாளினை உலக சுற்றுலா தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் அறிவிக்கப்பட்டு உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலாவும் அதன் உள்ளடங்கிய வளர்ச்சியும் என்கிற கருப்பொருளை வலியுறுத்தியுள்ளது. இதன் நோக்கமானது சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், சமூக பொருளாதார, பண்பாட்டு கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பினை மேம்படுத்தி உலக நாடுகளிடத்தே நிலைநிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதேயாகும்.

மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவிக்கையில் :

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு  உணவு பட்டியல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு உணவு பட்டியலில் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அவர்களுக்கு விருப்பமான விலங்குகளின் புகைப்படங்கள் வரையப்பட்டு இதனால் குழந்தைகள் பல்வேறு உணவு வகைகளை ருசித்து உண்பதற்கு விரும்புவார்கள். இரண்டாவது திட்டமாக அனைத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்களில் உணவு பட்டியலில்  தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது திட்டமாக அனைத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்களில் உணவு பட்டியலில்  பார்வையற்றவகள் அறிந்து கொள்ளும் வகையில், பிரெய்லி வடிவில் ஒரு தனி உணவுப்பட்டியல் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினமான இன்று (27.09.2021) தமிழ்நாட்டில் கொண்டாடும் விதமாக சென்னை தீவுத்திடலில், தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம் (Discover Tamilnadu ) நிகழ்ச்சியில் சமூக ஊடகங்களில் புகழ்பெற்று விளங்கும் 10 சமூக ஊடகவியலாளர்கள் செல்ல உள்ள வாகனத்தை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை சாலை வழி பயணம் வாயிலாக, பலராலும் அறியப்படாத புதிய இடங்களைக் கண்டறிந்து அவற்றின் சிறப்பை உணர்த்துவதற்காக 11 நாட்கள் பயணம் மேற்கொண்டு சமூக ஊடகங்களில் வலைப்பதிவுகள் , சிறு காணொலிப் பதிவுகள் மற்றும் ஏனைய பதிவுகள் மூலம் சுற்றுலா தலங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழ்ப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்.

இதனை தொடர்ந்து ரேடியோ மிர்ச்சி அதிர்வெண் பண்பேற்ற வானொலியில் தொகுப்பாளினி ஆர்.ஜே அர்ச்சனாவுடனான நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்களும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., அவர்களும் மற்றும் சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்களும் கலந்து கொண்டு ரேடியோ மிர்ச்சி தமிழ் வலையொளி அலைவரிசையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக சுற்றுலா தினச் சிறப்புத் தமிழ் காணொலிப் பாடல் வெளியீட்டுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கட்டடத்தில் உள்ள அரங்கத்தில் சுற்றுலாத் துறையில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள்’   குறித்த கருத்தரங்கு மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், முதன்மையான சுற்றுலா மேம்பாட்டில் தொடக்க முயற்சிகள் ஆகியவற்றை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வாவ் தமிழ்நாடு என்ற இணையவழி ஒளிபடக்கலை மற்றும் காணொலிக்கலைப் போட்டி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில சுற்றுலாத் தலங்களில் கண்ணைக் கவரும் கருத்துகளைக் காட்சிப்படுத்தும் ஒளிப்படக்கலையையும் பயண ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும் வகையில், வாவ் தமிழ்நாடு என்ற இணைவழி ஒளிபடக்கலை மற்றும் காணொலிக்கலைப் போட்டி தொடங்கப்பட்டது. இப்போட்டிக்கான பதிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான wowtamilnadu.com வாயிலாக 27.09.2021 - 31.12.2021 வரையில் பெறப்படும்.,

மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளைத் தடையின்றி முன்பதிவு செய்வதற்காக, முதன்மையான பயணச்சேவை வழங்குநர் வலைத்தளங்களில் ஓட்டல் தமிழ்நாடு -க்குச் சொந்தமான தங்குமிடங்கள் குறித்த பட்டியலை வெளியிடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சாதனை முயற்சி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின், ஓட்டல் தமிழ்நாடு தங்கும் அறைகளின் முன்பதிவுகள் முன்னணி இணையதள பயண நிறுவனங்களான make my trip, yatra, goibibo, ease my trip, happy easy go, booking.com, trivago, agoda போன்ற நிறுவனங்களின் இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்குமிடங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் அனைவரும் அறிந்து கொள்வதுடன், அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்.

மேலும் Enchanting tamilnadu என்ற வணிக சின்னத்தை உள்ளடக்கி சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துதல் , திருபுவனம் பட்டு சேலைகள் , சுவாமிமலையில் வெண்கலம் மற்றும் ஐம்பொன் சிலைகள் வடிவமைத்தல் , 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரம் போன்ற குறும்படங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் தமிழ்நாடு அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைப்பிடித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஆகியவற்றை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் வெளியிட்டு பார்வையிட்டார். இச்சுற்றுலா குறும்படங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சமூக ஊடக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மேலும், இந்நிகழ்வில் சுற்றுலாத் தலங்களை மேம்பாடுத்தும் வகையில், மெய்யுணர் (Augument reality based) அஞ்சல் அட்டைகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. அண்மைக்காலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயணிகள் சுற்றுலாத் தலங்களின் அழகைக் சிறப்பான வகையில் கண்டுகளிக்க வகை செய்வதுடன், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கான திட்டமிடலையும் இது ஊக்குவிக்கும். இந்நிகழ்வில் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள், பண்பாடு விழுமியங்கள், வியக்க வைக்கும் கட்டடக்கலை, அழகிய கடற்கரைகள், மனதை மயக்கும் அருவிகள், பாரம்பரியக் கலைகள், புகழ்பெற்ற கைவினைப்பொருட்கள் மற்றும் உலகிலேயே தமிழ்நாட்டை ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்துவும் துணைபுரிகின்றன.

Tags : Minister ,Dr. ,J.N. ,Tamil Nadu ,World Tourism Day - 2021 ,. Mavavadhan , அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன்
× RELATED கண்ணைக் கட்டிக்கொள்ளாதே