ஆந்திராவில் பள்ளி-கல்லூரிகள் மூடல்

திருமலை: ஆந்திராவில் இன்று அனைத்து கட்சிகள் சார்பில் பந்த் தொடங்கியது. இந்த பந்த்தில் தெலுங்கு தேசம், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பதி ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலை ஆகியவை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து பந்த்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசாரின் தடையை மீறி ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழைந்து தண்டவாளத்தில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பந்த்தையொட்டி நள்ளிரவு முதல் அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. அதேபோல் அரசு, தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த பந்த்துக்கு வங்கி, ஆட்டோ டாக்ஸி தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். தனியார் வணிக வர்த்தக நிறுவனங்களும் தானாக முன்வந்து கடைகளை அடைத்தனர்.

திருமலைக்கு மட்டும் பஸ்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் திருப்பதி பேருந்து நிலையத்திலும், திருமலையிலும் காத்திருக்கின்றனர்.

Related Stories:

More
>