×

முழு ஒத்துழைப்பு வழங்குவோம்!: ஆப்கானுக்கு சர்வதேச விமானங்களை இயக்குமாறு விமான நிறுவனங்களுக்கு தாலிபன்கள் கோரிக்‍கை..!!

காபூல்: ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்குமாறு விமான நிறுவனங்களுக்‍கு தாலிபன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கடந்த மாதம் 15ம் தேதி கைப்பற்றினர். அப்போதும் காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க நிறுவனம், கடந்த 30ம் தேதி அங்கிருந்தும் வெளியேறியது. இதையடுத்து தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. இந்த நிலையில் தாலிபான் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதால் பல ஆப்கானிஸ்தான் குடிமக்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்ப முடியாமல் வெளியில் சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.

கத்தார், துருக்கி ஆகியவற்றின் நிபுணர்களின் உதவியோடு காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, சர்வதேச மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் விமான நிலையம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்புபோல் ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து சர்வதேச விமானங்களையும் இயக்க விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் விமான நிறுவனங்களுக்‍கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் மத்தியில் தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியதை  தொடர்ந்து, காபூலுக்கான விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Taliban ,Afghanistan , Afghan, international airline, airline, Taliban
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை