டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொயின் அலி ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி அறிவிக்க உள்ளார். ஐபிஎல், உலக கோப்பை டி.20ஐ தொடர்ந்து அடுத்து ஆஷஸ் தொடரில் ஆடினால் நீண்ட நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கவேண்டி இருக்கும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 34 வயதான அவர் இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட்டில் ஆடி 2914 ரன் எடுத்துள்ளார்.

195 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில் அவர் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

Related Stories:

More
>