ராஜஸ்தான்-ஐதராபாத் இன்று மோதல்

துபாய்: ஐபிஎல் தொடரில் துபாயில் இன்று நடக்கும் 40வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க இனி வரும் போட்டியில் வெற்றி பெற முயலும். மறுபுறம் ராஜஸ்தான் 4 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

பிளேஆப் சுற்றுக்குள் நுழைய இன்று வெற்றி முக்கியமாகும். இரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் மோதியதில் தலா 7 வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனில் மே 2ம் தேதி மோதிய போட்டியில் ராஜஸ்தான் 55 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

Related Stories: