×

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிதாக 5 காவல்நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது-எஸ்பி மணி பேட்டி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்திற்கு மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் புதிதாக 5 போலீ ஸ் ஸ்டேஷன்கள் அமைய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட எஸ்பி மணி கூறினார்.இது தொடர்பாக பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி மணி அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டமாகும். தமிழகத்தின் மையத்தில், தேசிய நெடுஞ்சாலை என்.எச்.45 திருமாந்து றை முதல் பாடாலூர் வரை 45 கிலோமீட்டர் நீளத்திற்கு பரபரப்பான பிரதான சாலை இருப்பதால் மட்டுமே இப்பகுதியில் அதிகப்பட்ட விபத்துகள் ஏற்பட்டு, அதன் காரணமாக பிளாக் ஸ்பாட் பகுதிகள்அதிகமுள்ள நெடுஞ்சாலையாக இருந்துவந் தது. தற்போது அதிக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 7 இடங்கள், விபத்துகள் நடக்குமிடங்க ளாகக் கண்டறியப்பட்ட 12 இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் விபத்தைத் த டுக்க ஒளிரும் விளக்குகள் பிலிங்க்கர்ஸ் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெரம்பலூர் சப் டிவிஷன் எல்லைக்குள் பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், அரும்பாவூர் போலீஸ் நிலையங்களும், பெரம்பலூரில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனும் உள்ளன. மங்கலமேடு சப்.டிவிஷனில் குன்னம், மங்கலமேடு, வி.களத்தூர், கை.களத்தூர் ஆகிய போலீஸ் ஸ்டேசன்களும் உள்ளன. திருச்சி மத்திய மண்டலத்தில் மக்கள் தொகை மற் றும் பரப்பளவு அடிப்படை யில் உள்ள போலீஸ் ஸ்டே சன்களின் எண்ணிக்கை யைக் கணக்கில் கொண்டால், பெரம்பலூர் மாவட்ட த்தில் போலீஸ் ஸ்டேசன்க ளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன. குறிப்பாக குற்றசம்பவங் களை முன்கூட்டியே கண்ட றிந்து தடுக்கவும், குற்றவா ளிகளை விரைந்து கைது செய்யவும், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டவும், பொது நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் போதுமான போலீஸ் நிலையங்களும், தேவையான போலீ சாரும் இருப்பது மிகமிக அவசியம்.

திருச்சி மத்திய மண்டலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 போலீஸ் ஸ்டேசன்களும், அரியலூர் மாவட்டத்தில் 18, கரூர் மாவட்டத்தில் 19, நாகை மாவட்டத்தில் 17, மயிலாடுதுறையில் 16, தஞ்சை மாவட்டத்தில் 47, திருவாரூர் மாவட்டத்தில் 33, திருச்சி மாவட்டத்தில் 35 போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் வெறும் 9 போலீஸ் ஸ்டேசன்கள் மட்டுமே உள் ளது. எனவே மக்கள்தொகை, பர ப்பளவு அடிப்படையிலும், குற்ற சம்பவங்களை கருத் தில் கொண்டும் புதிதாகபெரம்பலூர் (கிழக்கு) என் கிற பெயரில் துறைமங்க லம் பகுதியிலும், தாலுக்கா, ஒன்றிய தலைநகரங்களா க விளங்கிடும் வேப்பந்தட் டை, ஒன்றியத் தலைநகராகவுள்ள வேப்பூர் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள அம்மாப்பாளையம் ஆகிய இடங்களில் புதிய போலீஸ் ஸ்டேசன்களும், மங்கலமேட்டில் ஒரு அனைத்து மக ளிர் போலீஸ் ஸ்டேசனும் என 5 புதிய போலீஸ் ஸ்டேச ன்கள் அமைக்க வேண்டும்.

மாவட்ட குற்றப்பதிவேடு கள் பிரிவுக்கு ஒரு டிஎஸ்பி பதவியிடம், மாவட்டத்திற்கு புதிதாக ஒரு இன்ஸ்பெக் டர் பதிவியிடம் தேவையெ னவும், தற்போது ஆயுதப் படை வளாகத்தில் 3பிளட் டோன் படைப்பிரிவு போலீ சார் பணியில் உள்ள நிலை யில் சட்டம் ஒழுங்கு பிரச்ச னைகளை சமாளிக்க ஆயு தப்படை பிரிவுக்கு கூடுத லாக ஒரு பிளட் டோன் படைப்பிரிவு வழங்கிடவும், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி ராதிகா மூலமாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவு க்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

சிசி டிவி கேமராக்கள்

பெரம்பலூர் நகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிக்கும் குற்றவாளி களைக்கண்டறிய மேலும் பல இடங்களில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தனியார் பள்ளி, கல்லூரிகளின் தாளாளர்கள், அரிமா, ரோட்டரி சங்கத்தினர், ஆலை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் வாங்கி வழங்கிட விருப்பமிருந்தால் காவல்துறையிடம் வழங்கலாம் எனத் தெரிவித்தார்.

Tags : Perambalur district ,SP Mani , Perambalur: It has been suggested to set up 5 new police stations in Perambalur district based on population and area.
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...