×

தோகைமலை அருகே வெள்ளாடு ,செம்மறி ஆடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தோகைமலை : தோகைமலை அருகே வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதோியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் கால்நடை பராமாிப்பு துறையும் இணைந்து வௌ்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வேலாயுதபண்ணைகளம் மற்றும் புழுதோி ஆகிய கிராமங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடை துறையின் உதவி இயக்குனர் முரளிதரன் கலந்துகொண்டு கால்நடைகளுக்கான நோய் மற்றும் பராமாிப்பு குறித்து விளக்கினார். முகாமில் கால்நடைகளுக்கான நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வௌ்ளாடு மற்றம் செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் வௌ்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளா்ப்பில் லாபம் பெறுவதற்கு விவசாயிகள் திட்டமிடுதல், நோய் மேலாண்மை உள்பட பல்வேறு தலைப்புகளில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினா். முகாமில் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் கதிரவன், கால்நடை மருத்துவ அலுவலர் ரமேஷ், கால்நடை பராமாிப்பு உதவியாளா் புஷ்பலதா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 30 கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Dokayimai , Tokaimalai: A special medical camp for goats and sheep was held near Tokaimalai. Karur District Tokaimalai
× RELATED வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா