நீலகிரி எம்பி ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு

ஊட்டி : ஊட்டி நகர திமுக சார்பில் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திமுக  துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசாவின் முகாம்  அலுவலகத்தில் அவரது மனைவி படத்தை நீலகிரி மாவட்ட திமுக  செயலாளர் முபாரக் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ஊட்டி  நகர திமுக சார்பில் ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட  100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் ஜார்ஜ் வரவேற்றார். ஊட்டி எம்எல்ஏ கணேஷ், மாவட்ட செயலாளர்  முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், மாவட்ட அவைத் தலைவர் பில்லன்,  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், திராவிடமணி, செந்தில்  ரங்கராஜன், முஸ்தபா, மாவட்ட பொருளாளர் நாசர் அலி உட்பட ஏராளமானோர்  பங்கேற்றனர்.

தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றிய 4வது இடைத்தேர்தலில்  போட்டியிடும் திமுக வேட்பாளர் உத்தமனை ஆதரித்து மசினகுடி பஜார், 144  குரூப் அவுஸ், மாயார் உள்ளிட்ட இடங்களில் நீலகிரி எம்பி ஆ.ராசா பிரசாரம்  செய்தார். சேரங்கோடு 11வது வார்டில் போட்டியிடும் பாரதியை  ஆதரித்து மழவன் சேரம்பாடி, புஞ்சகொல்லி, சப்பந்தோடு, காரக்கொல்லி ஆகிய  பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான  திமுகவினர் பங்கேற்றனர்.

பந்தலூர் : பந்தலூர் பஜாரில் எம்பி ஆ.ராசாவிற்கு திமுகவினர் உற்சாக  வரவேற்பு அளித்தனர். நீலகிரி எம்பி ராசா நேற்று  கூடலூர், பந்தலூர்  சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை  சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிலையில் நேற்று பந்தலூர் வந்த ஆ.ராசாவிற்கு நெல்லியாளம் நகர கழகம் சார்பில்  பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பஜார் பகுதியில் ஊர்வலமாக  சென்று கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நெல்லியாளம் நகர  செயலாளர் காசிலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக் முன்னிலை  வகித்தார். முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி மற்றும் நகர கழக  நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், வார்டு கழக  நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.கூடலூர்: கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 4வது வார்டு மசினகுடி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் உத்தமனை ஆதரித்து மசினகுடி பஜார், 144 காலனி மற்றும் மாயார் உள்ளிட்ட பகுதிகளில் நீலகிரி எம்பி ஆர். ராசா. மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோர் வாகன தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.  

ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரசார நிகழ்ச்சியில், திமுக செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜ், திராவிடமணி, முஸ்தபா, மாவட்ட பொருளாளர் நாசர், கூடலூர் நகர செயலாளர் ராஜேந்திரன்,  உதகை வடக்கு ஒன்றிய செயலாளர் துரை, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், பொதுக்குழு உறுப்பினர் சீனி, ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி, காந்தி செல்லதுரை, பாபு, ஸ்ரீ ராஜா, சுப்பிரமணி மற்றும் செல்வரத்தினம் அர்னால்டு தமிழ் மற்றும் செல்வரத்தினம், ரெனால்டு, தமிழழகன், பிரதீஸ், ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>