×

எல்.இ.டி. விளக்குகளால் மின்னொளியில் மிளிரும் தஞ்சை பெரிய கோயில்!: பகலை விட இரவில் கம்பீரமாக தோற்றமளிக்கும் சிற்பங்கள்..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 7 கோடி ரூபாய் செலவில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் இரவில் கண்குளிர காட்சியளிக்கின்றன. ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயிலை இரவிலும் அழகுற காட்சியளிக்கும் வகையில் தொல்லியல்துறை எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டது. சுமார்  7 கோடி ரூபாய் செலவில் 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த திட்டம் நிறைவடைந்த நிலையில் கோயிலின் விமான கோபுரம், கேரளானந்தன் கோபுரம் உள்பட அனைத்தும் மின்னொளியில் மிளிர்கின்றன.

இதனிடையே கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட ஒன்றிய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உலக அதிசயங்களை விட கோயில் சிறப்பாக உள்ளது என்று கூறினார். பகலை விட இரவில் சிற்பங்கள் மிகுந்த கம்பீரத்துடன் காட்சியளிக்கின்றன. மேலும் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை இரவிலும் படிக்கும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் பொறுத்தப்பட்டதற்கு உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Thanjai , LEDs, Tanjore Great Temple, Sculptures
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...