ஆஸ்ட்ரவா ஓபன் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்

ஆஸ்ட்வரா: செக் குடியரசு நாட்டில் நடந்த  ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் ஸாங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் கெய்ட்லின் - எரின் ரவுட்லைப் (நியூசி.) ஜோடியுடன் மோதிய சானியா ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது. இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்தில்  முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் சானியா வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது. முன்னதாக, கடந்த மாதம் கிறிஸ்டினா மெகேலுடன் இணைந்து விளையாடிய கிளீவ்லேண்ட் ஓபனில் அவர் பைனல் வரை முன்னேறி 2வது இடம் பிடித்திருந்தார்.

Related Stories: