உலக சுற்றுலா தினத்தையொட்டி புகைப்படம், வீடியோ போட்டி: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான உலக சுற்றுலா தினம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக புகைப்படப் போட்டி மற்றும் வீடியோ போட்டி சமூக ஊடகங்கள் வாயிலாக நடத்தப்படவுள்ளது. படைப்புகள் அனைத்தும் சமூக ஊடகங்கள் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. தங்களது படைப்புகளை கலெக்டர் திருவள்ளுர் என்கிற சமூக வலைதள முகவரிகளில் டேக் செய்யப்பட வேண்டும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தமிழ்நாடு சுற்றுலாத்தலங்கள் பற்றியதாக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு ரொக்க பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 29ம் தேதி மாலை 5 மணி வரை. போட்டிகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய, சுற்றுலா அலுவலகம், திருவள்ளுர், தொலைப்பேசி எண்கள்: 7708645165, 044-27666007 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>