புரட்சி பாரதம் கட்சி கருத்தரங்கு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம் ஆண்டர்சன் பேட்டையில் பூனா ஒப்பந்த நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் பூங்காநகர் பா.காமராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியர் பா.ரஞ்சித் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் மாநில நிர்வாகிகள் முல்லை கே.பலராமன், மணவூர் ஜி.மகா, பூவை ஆர்.சரவணன், இ.குட்டி, பி.சைமன்பாபு, பிரீஸ் பன்னீர், என்.பி.வேதா, என்.பி.முத்துராமன், ஏ.கே.சிவராமன், திருவள்ளூர் நகர செயலாளர் எம்.எழில்வண்ணன், நேமம் விஜி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: