மண் எடுக்க அரசு அனுமதி குலாலர் சங்கம் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவரும், முன்னாள் வாரிய தலைவருமான சேம.நாராயணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  மண்பாண்டத் தொழிலாளர்கள்  மண்பாண்டங்கள், செங்கல் சூளை, சொருவோடு தயாரிக்க மண்எடுக்க, கடந்த அதிமுக அரசு மண் எடுக்க சுற்றுச் சூழல் அனுமதி பெறவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை நீக்கக்கோரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். தற்போது மண்பாண்டங்கள் செய்ய மண் எடுக்க சுற்றுச் சூழல் அனுமதி தேவையில்லை என்று திமுக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Stories:

More
>