சின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி  தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி அருகே மலைக்கிராம மாணவர்கள் தங்கி படிக்கும்  பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது. தற்போது 10, 11, 12ம்  வகுப்பு படிக்கும் மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். மாணவர்கள்  விடுதி அருகே சுமார் 100 அடி தூரத்திற்கு பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள  பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்துள்ளன.

மேலும் அப்பகுதியை சிலர்  திறந்தவெளி கழிப்பிடமாக இப்பகுதியை பயன்படுத்துகின்றனர். இதனால்  மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடும்  துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியே நடந்து செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு  செல்லும் அவலம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சுகாதார சீர்கேடு  ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More