ஆர்.கே.பேட்டை பகுதியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

பள்ளிப்பட்டு, செப்.26: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம், பாலாபுரம் ஆகிய பகுதிகளில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பானுமதி வரவேற்றார்.  இந்நிகழ்ச்சியில், எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.  

இந்நிகழ்ச்சியின்போது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு  மாலை அணிவித்து, வளையல் போட்டு, வளகாப்பு நடத்தப்பட்டது. பின்னர், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ சந்திரன் பேசும்போது,  `ஊட்டச்சத்தான உணவினால் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,’ என்று பேசினார்.

இதில்,  ஒன்றிய செயலாளர் சி.என்.சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தி செங்குட்டுவன், தென்னரசு, ராமசாமி, சித்ரா கணேசன், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தம்மா ஆனந்தன், துணைத் தலைவர்  ஜெயந்தி சண்முகம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>