மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் பிறந்தநாள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட, ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார், லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரின் மூத்த மகன் கோ.ப.அன்பழகன் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் துவங்கி, ஏழை எளியவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது, கறவை மாடு வழங்குவது, மிதிவண்டி, ஸ்கூட்டர், ஆடைகள் வழங்குவது உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்கிறார்.

இவரது பிறந்தநாள் விழா மற்றும் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் 19ம் ஆண்டு தொடக்க விழா ஆண்டுதோறும் மேல்மருவத்தூர் உள்ள ஞான பீடத்தில் விமர்சையாக நடத்தப்படும். இந்நிலையில், கோ.ப.அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தந்தை பங்காரு அடிகளார், லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரை நேற்று காலை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், சித்தர் பீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்தார்.  

இதையொட்டி, மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ஞானபீடத்தில் கோ.ப.அன்பழகனுக்கு, மக்கள் தொண்டு இயக்கத்தினர் உற்சாகமாக வரவேற்பளித்தனர். ஞானபீடத்தில் உள்ள விநாயகர் உள்பட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து, தனது பிறந்தநாள் கேக்கினை மக்கள் தொண்டு இயக்கம் தொண்டர்களுடன் வெட்டிக் கொண்டாடினார்.  அப்போது, அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆன்மிக இயக்கத்தினர், பொதுமக்கள் உள்பட பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்பழகனுக்கு, சால்வை அணிவித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை ஆஷா அன்பழகன், வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் செய்தனர்.

Related Stories: