ஆஸ்ட்ரவா ஓபன் பைனலில் சானியா ஜோடி

ஆஸ்ட்வரா: செக் குடியரசு நாட்டில் நடக்கும்  ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் ஸாங் இணை தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனைகள் எரி ஹோசுமி - மகோடோ நினோமியா ஜோடியுடன் மோதிய சானியா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தியது. இப்போட்டி 1 மணி, 21 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

சாக்கரி அசத்தல்: மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதிய மரியா சாக்கரி (கிரீஸ்) 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 51 நிமிடத்துக்கு நீடித்தது.

Related Stories:

More