×

தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததை ரத்து செய்யக்கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில், கடந்த 1949ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டப்பிரிவின்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் அனுமதி இல்லாமல் வனப்பகுதி நிலங்களின்  உரிமையாளர்கள் அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ, குத்தகைக்கு விடவோக்கூடாது என்று கூறுகிறது. இந்த நிலையில், 2011ல் இந்த சட்டத்தில் புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு திருத்தம் கொண்டு வரபட்டது.

அந்த திருத்ததின்படி, குழுவின் முன் அனுமதியோடு வன நிலங்களின் உரிமையாளர்கள் அதை வேறு ஒருவருக்கு விற்கலாம் என்றும், அதனை வாங்குபவர்கள் அந்த வனப்பகுதியை தானே வைத்து கொள்வதற்கு அரசுக்கோ, குழுவுக்கோ விண்ணப்பம் அளித்து அனுமதி பெறலாம் என்று  வகை செய்யபட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை அண்ணா நகரை சேர்ந்த முருகவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், வனப்பகுதியை சட்டவிரோதமாக வாங்கியவர்கள் குழுவிடம் விண்ணப்பித்து  உரிமை பெறுவது என்பது  சட்டவிரோத விற்பனைக்கு ஒப்புதல் அளிப்பது போலாகும்.

இந்த சட்ட பிரிவினால் காடுகள் அழிக்கபட்டுவிடும் என்பதால்   இந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,  மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 6 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Tags : Case seeking annulment of amendment to the Private Forest Protection Act: Government of Tamil Nadu reply order iCourt order
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...