7 புதிய அமைச்சர்களுடன் பஞ்சாப் அமைச்சரவை இன்று பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவும், தனக்கு எதிராக 50 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதாலும், இம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் கடந்த வாரம் பதவி விலகினார். சித்துவின் ஆதரவாளரும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவருமான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வரானார். அவருடன் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, ஓபி சோனி துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.இதற்கிடையே, டெல்லியில் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் சரண்ஜித் சிங் நேற்று, பஞ்சாப் திரும்பினார்.

உடனே, ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ``பஞ்சாப் அமைச்சரவை ஞாயிறு (இன்று) மாலை 4.30 மணிக்கு பதவி ஏற்க உள்ளது’’ என்றார். புதிய அமைச்சரவையில் 7 பேர் புதிதாக இடம் பெற உள்ளதாகவும், அமரீந்தர் அமைச்சரவையில்  இடம் பெற்றவர்களில் 8 பேருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும், 5 பேர் நீக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

More
>