நாளை மறுதினம் காங்.கில் சேர்கிறார் கன்னையா குமார்

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்  சங்கத் தலைவர் கன்னையா குமார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களால் கைது செய்யப்பட்டதால் புகழ் பெற்றார். தற்போது இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளார். அதேபோல், குஜராத்தை மாநிலத்தில் உள்ள வேதகம் தொகுதி எம்எல்ஏ.வாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி.  ராஷ்டிரிய தலித் அதிகார் மன்ச் கட்சியை சேர்ந்தவர். குஜராத்தில் தலித் தலைவராக உருவெடுத்து வருகிறார்.

இவர்கள் வரும் 28ம் தேதி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைய உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இவர்கள் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி கட்சியில் இணைவார்கள் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த தேதி மாற்றப்பட்டு, முன்கூட்டியே காங்கிரசில் இணைகின்றனர். இவர்களுக்கு இக்கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories:

More