கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய காட்டு யானை

குன்னூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை 9 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது அந்த பஸ்சை காட்டு யானை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக நிறுத்தினார். காட்டு யானை முன்பக்க கண்ணாடியை துதிக்கையால் உடைத்து நொறுக்கியது.

உடனே பயணிகள் அலறினர். டிரைவர் தைரியமாக, வேகமாக ஒலி எழுப்பி யானையை விரட்ட முயன்றார். அப்போது யானை தந்தத்தால் கண்ணாடியை மீண்டும் உடைத்தது. இதனால் டிரைவர் இருக்கையைவிட்டு இறங்கினார். சிறிது நேரத்தில் யானை சாந்தமடைந்து, பின்புறமாக நடந்து வனத்துக்குள் சென்றுவிட்டது. சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய டிரைவரை அனைவரும் பாராட்டினர். பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது.

பஸ் கண்ணாடியை உடைத்து யானை அட்டகாசம் செய்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது.

Related Stories: