கோவளம் கடற்கரைக்கு 9வது நீலக்கொடி கடற்கரை சான்று: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் வெளியிட்ட அறிக்கை:  செங்கல்பட்டு கோவளம் கடற்கரைக்கு இந்தியாவின் 9வது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் 21.9.2021 அன்று வழங்கப்பட்டது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பானது, உலகளவில் பாதுகாப்பு, துய்மையான கடற்கரைகளை தேர்ந்தெடுத்து, நீலக்கொடி கடற்கரை (ப்ளு பிளாக் பீச்) என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.

கடற்கரையின் முக்கிய ஈர்ப்பு, நீராடும் மண்டலத்தில் பாதுகாப்பாக நீந்தக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஆம்பிபியஸ் வீல் நாற்காலி ஆகும். கடற்கரையில் குளிப்பதற்கான காலம் ஜனவரி 15 முதல் செப்டம்பர் 15 வரை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை மற்றும் நீரோட்டநிலையைப் பொறுத்து இக்காலம் அறிவிக்கப்படும்.கடற்கரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

Related Stories:

More
>