ஏப்.1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ500 ஊதிய உயர்வு

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ500 ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை அறிவிப்பின் போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இந்நிலையில், இதற்கான உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டது.

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: கடை மேற்பார்வையாளர்களுக்கு ரூ12,750ல் இருந்து ரூ13,250 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ10,600ல் இருந்து ரூ11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ₹9,500ல் இருந்து ₹10,000 ஆகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியம் ஏப்ரல் 1, 2021 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

உயர்த்தப்பட்ட ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் தவறாது கண்காணிக்க உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 26 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: