×

லாரி கவிழ்ந்து கற்கள் சிதறியதால் கடும் போக்குவரத்து நெரிசல்: மதுராந்தகம் அருகே பரபரப்பு

மதுராந்தகம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கற்கள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம் அருகே சென்றுக்கொண்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரி உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் திரும்ப முயன்றது. அப்போது பின்னால் வந்த கற்கள் ஏற்றிய லாரி திடீரென அந்த லாரி மீது சாலையில் கவிழ்ந்தது. சாலை முழுவதும் கற்கள் சிதறியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக செங்கல்பட்டு-திண்டிவனம் செல்லும் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.

 இதனால் இருபுறங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதன் காரணமாக பொதுமக்கள், பயணிகள் மற்றும் அவசர தேவைக்காக சென்றவர்கள் பலரும் சிக்கி தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு போக்குவரத்து போலீசாரும் படாளம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  அவர்கள் உடனடியாக போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது வாகனங்கள் அடுத்தடுத்து கிளம்பி சென்றன.

Tags : Madurantakam , Heavy traffic jam as lorry overturns and stones scatter: commotion near Madurantakam
× RELATED லாரி மீது தனியார் பேருந்து உரசியதால் 4...