ஐபிஎல்லில் இன்று 2 ஆட்டம்: ராஜஸ்தானை பழிதீர்க்குமா டெல்லி? இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்-பஞ்சாப் மோதல்.!

அபுதாபி: ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் டெல்லி-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. வலுவான டெல்லி 9 போட்டியில், 7 வெற்றி, 2 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடிப்பதுடன் பிளேஆப் சுற்றை முதல் அணியை உறுதி செய்யலாம். மறுபுறம் ராஜஸ்தான் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்ற உற்சாகத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் மோதியதில் டெல்லி 11, ராஜஸ்தான் 12ல் வென்றுள்ளன. நடப்பு தொடரில் ஏற்கனவே மோதிய போட்டியில், ராஜஸ்தான் வென்றது. இதற்கு பழிதீர்க்க டெல்லி காத்திருக்கிறது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் 8 போட்டியில் ஒரு வெற்றி, 7 தோல்வி என கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 6 போட்டியில் வென்றாலும் பிளே ஆப் வாய்ப்பு கடினம் தான். மறுபுறம் பஞ்சாப் 9 போட்டியில் 3 வெற்றி, 6 தோல்வி கண்டு 7வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க முடியும். இதனால் வாழ்வா-சாவா நிலையில் இரு அணிகளும் களம் காண்கின்றன. இரு அணிகளும் இதுவரை 17 போட்டிகளில் மோதியதில் 12ல் ஐதராபாத், 5ல் பஞ்சாப் வென்றுள்ளது. நடப்பு சீசனில் ஐதராபாத் பெற்ற ஒரே வெற்றி பஞ்சாப்பிற்கு எதிராக தான்.

Related Stories: