தரகம்பட்டி பகுதியில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடவூர் : கடவூர் ஒன்றியம் தரகம்பட்டி பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட அலுவலர் உமையாள் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகள் மத்தியில் , குழந்தை திருமணம் நடைபெறுவதால் அக்குழந்தைக்கு உடல் மற்றும் மனம் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அதனால் சமுதாயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விரிவாக்க அலுவலர் சாந்தி ,கடவூர் வட்டார ஊர் நல அலுவலர்கள் வளர்மதி, சித்ரா, மகிளா சக்தி கேந்திரா பணியாளர்கள் கண்மணி, சங்கீதா, பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>