கொடைக்கானலில் கேரட் விளைச்சல் ‘டாப்’ நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் : கொடைக்கானல் மலை கிராமங்களில் கேரட் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதற்கு ஏற்ப விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பருவநிலைக்கு ஏற்ப காய்கறிகள், பழ வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.

பீன்ஸ், அவரை, பூண்டு, ப்ளம்ஸ் ஆகியவை சீசன் முடிவடைந்துள்ளது. இந்நிலியில், பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பல இடங்களில் கேரட் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளதால் கேரட் நன்றாக விளைந்துள்ளது. மேலும், கேரட் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரட்டை அறுவடை செய்து வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கேரட் விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

More
>