×

2வது சீசனை முன்னிட்டு மலர் அலங்கார பணி துவக்கம்

ஊட்டி : 2வது சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் நேற்று துவங்கியது.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 2வது ஆண்டாக ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், 2வது சீசனுக்காக ஊரடங்கு காலத்தில் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் பல்வேறு வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த சூழலில் தொற்று பரவல் குறைந்த நிலையில் 4 மாதங்களுக்கு பின் கடந்த மாதம் 23ம் ேததி முதல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது, 2வது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சுமார் 12 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்கும் மலர் செடிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக அவற்றை மலர் மாடங்களில் அடுக்கும் காட்சிப்படுத்தும் பணிகள் நேற்று காலை தாவரவியல் பூங்காவில் நடந்தது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று இப்பணிகளை துவக்கி வைத்தார். அதன்பின் அவர் கூறுகையில்,``ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்காக பூங்காவின் பல இடங்களில் உள்ள பாத்திகளில் 2.4 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இவை தற்போது பூத்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பார்த்து ரசிக்க வசதியாகவும் டேலியா, சால்வியா, சென்டோரியா, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், கிரை சாந்திமம், ஆஸ்டர், பிரிமூலா, பால்சம், அஜிரெட்டம், சைக்ளமன், ஜெரோனியம் உள்ளிட்ட 120 ரக மலர் செடிகள் 12 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு அவை பூத்து குலுங்குகின்றன. இவற்றை அலங்கார மாடங்களில் இன்று (25ம் தேதி) முதல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலா பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பார்த்து ரசிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Ooty: Flower decoration work at Ooty Government Botanical Garden started yesterday ahead of the 2nd season due to corona infection.
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!