×

வங்கக்கடலில் உருவாகிறது குலாப் புயல்: நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் கணிப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா - ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது. தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இடையே கலிங்கப்பட்டினத்தில் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்த புயலால் அதிகமான சேதாரங்கள் இருக்காது எனவும் கடலோர மாவட்டங்களில், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் உள்மாநிலங்களிலும் இதன் காரணமாக அதிக அளவில் மழை கிடைக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gulab ,Bangladesh Sea ,Indian Meteorological Centre , Weather Center
× RELATED நடப்பாண்டில் அதிகமான வெப்ப அலை...