×

மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியின் சொத்து ஆவணங்கள் பதுக்கலா? வேலூர் ஆவினில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 மணி நேரம் சோதனை: முக்கிய ஆவணங்கள், ஸ்கேனர் பறிமுதல்

வேலூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு ேபாலீசார் கே.சி.வீரமணியின் வீடு, நட்சத்திர ஓட்டல், கல்லூரி உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5 கிலோ தங்கம், 9 சொகுசு கார்கள், அமெரிக்க டாலர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், வீரமணியின் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 551 யூனிட் மணல் பறிமுதல் செய்தனர்.

ேமலும், மாஜி அமைச்சர் வீரமணிக்கு, நெருக்கமான அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கிடையே கே.சி.வீரமணிக்கு மிகவும் நெருக்கமானவரும் வேலூர் ஆவின் தலைவருமான வேலழகன் அலுவலகத்தில் ேக.சி.வீரமணி ெதாடர்பான ஆவணங்களை பதுக்கி இருக்கலாம் என்று வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேலூர் ஆவின் அலுவலகத்திற்கு நேற்று  அதிரடி சோதனை நடத்தினர். ஆவின் தலைவர் வேலழகன் அறையில் பீரோ, அலுவலக பைல்கள், அலமாரி உட்பட ஒரு இடம் விடாமல் ஆய்வு செய்தனர்.

பின்னர் மாலை 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை முடிவுக்கு வந்தது. சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள், ஸ்கேனர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ெகாண்டு சென்றனர்.  இதில் கே.சி.வீரமணியின் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனையால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ேகனரில் ஆவணங்கள் சிக்குமா?
வேலூர் ஆவின் அலுவலக கட்டிடம் முழுவதையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியபோது கீழ் தளத்தில் உள்ள அலுவலகத்தில் ஸ்கேனர் ஒன்று இருந்தது. அதில் முக்கிய ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே, அந்த ஸ்ேகனரில் பதிவான ஆவணங்களின் விவரங்களை கண்டறிவதற்காக ஸ்கேனரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இதன் மூலம் கே.சி.வீரமணியின் பல்வேறு முறைகேடுகள் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : KC ,Veeramani ,Vellore ,Avin , Former Minister KC Veeramani, Property Documents, Avin, Anti-Corruption Police, Check
× RELATED எடப்பாடி முன்னிலையில் தொண்டனுக்கு ‘பளார்’