சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 5 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபி அந்தஸ்து: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்பட 5 கூடுதல்  டிஜிபிக்களை டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணை  பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக  காவல் துறையில் 1990 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான சென்னை மாநகர போலீஸ்  கமிஷனர் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், அபாஷ் குமார்,  டி.வி.ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கு பணி மூப்பு அடிப்படையில்  டிஜிபி அந்தஸ்து வழங்கப்படுகிறது.

தமிழக காவல் துறையில் டிஜிபி சைலேந்திரபாபு, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, கரன்சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், ஷகில் அக்தர், பிரதீப் வி.பிலிப் உட்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது டிஜிபியாக உள்ளனர். தற்போது 5 கூடுதல் டிஜிபிக்களுக்கு பதவி உயர்வை தொடர்ந்து தமிழக காவல் துறையில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: