கொரோனா மூன்றாவது அலை அச்சத்தால் தடுப்பூசி போட்டிருந்தால் ‘சோறு’ - குஜராத் ஓட்டல் ஓனர் சங்கம் அறிவிப்பு

காந்திநகர்: நாடு முழுவதும் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டு வருகிறது. மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் 83 கோடி டோஸ் தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன. ரயில், விமானம், மால் போன்றவற்றில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் உள்ள ஓட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் நரேந்திர சோமானி வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் ஆவது போட்ட வாடிக்கையாளர்களை மட்டுமே ஓட்டல்களில்  அனுமதிக்க வேண்டும். திருமணம் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால், கொரோனா பரவலை தடுக்க உணவகங்களின் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்தால், மீண்டும் பொதுமுடக்கம் அமலாகி தொழில் பாதிக்கும் என்பதால், இந்த முன்னெச்சரிக்கை முயற்சிகளை ஓட்டல் உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் உரிமையாளர் சங்கங்களின் அறிவிப்பால், ஓட்டலில் சாப்பிட வேண்டுமானால் தடுப்பூசி சான்றுடன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: