‘பர்த்டே பார்ட்டி’யின் போது தீயில் கூந்தல் கருகியதால் அமெரிக்க நடிகை அலறல்

நியூயார்க்: அமெரிக்காவில் பர்த்டே பார்ட்டியின் போது, எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைக்கும் போது நடிகையின் கூந்தல் தீயில் கருகியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க நடிகை நிக்கோல் ரிச்சி என்பவர் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, பர்த்டே கேக்கில் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும் ஏற்றிவைத்தார். பின்னர், அந்த மெழுகுவர்த்திகளை அணைப்பதற்காக முகத்தை கேக்கின் அருகே கொண்டு சென்று அணைக்க முயன்றார்.

அப்போது, திடீரென அவரது கூந்தல் எரிந்து கொண்டிருந்த தீப் பிழம்பின் மீது விழுந்தது. உடனே, அது குபீரென தீப்பற்றியது. அதிர்ச்சியடைந்த அவர், கத்தியவாறே தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மேலும் பரவி தலைமுடி முழுவதையும் கருக்கிக் கொண்டே எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தங்களது கையாலும், துணியாலும் அவரது தலைமுடியில் பரவியை தீயை அணைத்தனர். பின்னர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தில் நடிகையுடன் இருந்த நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

கடைசியாக நடிகையின் ‘பர்த்டே’ பார்ட்டி சோகத்தில் முடிந்து, மருத்துவமனையில் படுக்கையில் போட்டுவிட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பதிலளித்த அவரது நண்பர்களில் சிலர், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங்! நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்தும், கிண்டலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories:

More
>