×

ஆலைகளில் ஆய்வு நடத்த வேண்டும்: பட்டாசு விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு

சென்னை: பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார். பட்டாசானது அதிகமான ரசாயன பொருளை வைத்து தயாரிக்கப்படும். அந்த தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். நவம்பர் 4-ம் தேதி தீபாவளி என்பதால் இந்த இரு மாத காலத்தில் உற்பத்தி அதிகமாக இருக்கும். இதனால் சிறு, குறு, நடுத்தர பட்டாசு தொழிற்சாலைகளை உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் ஆடவு நடத்த வேண்டும்.

ஏனெனில் கடந்த அதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதனை தடுப்பதற்காக தமிழக முதல்வர் ஏற்கனவே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து நடக்காமல் இருப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார். சிறு மற்றும் நடுத்தர பெரிய தொழிற்சாலைகளில் ஆபத்தில்லை ரசாயனங்கள் பயன்படுத்துவதை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.

உரிமம் பெறாத தொழிற்சாலைகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசுகளில் ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்துவதை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் மேலும் பட்டாசு விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Minister CV Ganesan ,Diwali , Factories to be inspected: Minister CV Ganesan instructs District Collectors to ensure Deepavali without firecracker accidents
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...