கடன் கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி!: காஞ்சி அருகே மாற்றுத்திறனாளி விவசாயி விஷம் குடித்து தற்கொலை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வில்லிவலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கடன் தவணையை செலுத்த கோரி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடனை திருப்பி செலுத்தக்கோரி வீட்டு வாயில் முன் விவசாயி மனோகரனை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. ஊழியர்களின் அவதூறு பேச்சால் மனமுடைந்த விவசாயி மனோகரன் விஷம் குடித்து தற்கொலை என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயி மனோகரனின் உறவினர்கள் அளித்த புகாரில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories:

More
>