டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் உயிரிழப்பு.!

டெல்லி: டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஜிதேந்தர் கோகி என்பவருடன் மேலும் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கோகியின் எதிர்தரப்பான டெல்லி தரப்பினர், வக்கீல்கள் போல் உடை அணிந்து வந்து தாக்கினர்.

மேலும், இருதரப்பினருக்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்தவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, தலைநகர் டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் இதே வளாகத்தில் 38 வயது வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More