பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறையின் பல்வேறு திட்டப்பணிகள்-கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வடக்குமாதவி கீழக்கரை பகுதிகளில் தேசிய தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் விவசாயி அத்தியப்பன் என்பவர் ரூ1.77 லட்சம் மானியத்தில் நிழல் வலைக்குடில் சாகுபடி முறையில் கீரை வகைகள் மற்றும் நாற்றங்கால் உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி வருகிறார். அவரது நிழல் வலைகுடில் பகுதியை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு அங்கு பல்வேறு நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.

பின்னர் வடக்குமாதவி - கீழக்கரை பகுதியில் விவசாயி வேலுமணி என்பவர் 1.85 ஹெக்டர் நிலத்தில் பயிர் செய்துள்ள நிலக்கடலைக்கு சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தெளிப்பு நீர் பாய்ச்சும் முறையையும், விவசாயி ஜெய்தினேஸ் என்பவர் நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து உட்புறம் பாலித்தின் தார்ப்பாய் விரித்தமைக்கு, ரூ.75,000 மானியத்தில், பண்ணை குட்டையில் சேகரமாகும் மழைநீர் கொண்டு, சாகுபடி செய்துவரும் தோட்டக்கலை பயிர்களான முருங்கை தென்னை மற்றும் எலுமிச்சைக்கு நீர் பாய்ச்சி, மேலும் உபரி வருவாய் ஈட்டும் பொருட்டு குட்டையில் சேகரிக்கப்பட்ட மழைநீரில் மீன்குஞ்சுகள் வளர்த்து வரும் முறையையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,பின்னர் எசனை கிராமத்தில், விவசாய உற்பத்தியாளர் நிறுவன குழுமத்தின் மூலம், வேளாண் விளைபொருட்கள் ரூ.10 லட்சம் மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம், கடலை உரிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட் டும் இயந்திர மையத்தினை திறந்து வைத்து பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் நூத்தப்பூர் பகுதியில் 1,250 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள, மக்காச்கோள பயிரில் ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை செயல் விளக்கத் திடலினையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெங்கனூர் கிராமத்தில் 8 நபர்களின் பங்களிப்போடு 14.6 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலங்களாக மாற்றும் திட்டத்தினை யும், அதனைத்தொடர்ந்து நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் நேரடியாக கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் வயல் மண்ணை ஆய் வுசெய்து அன்றைய தினமே ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டு மண்ணில் உள்ள சத்து குறைபாடுகளும் மற்றும் அதற்கான தீர்வுகள் மண்வள அட்டை மூலம் வழங்கப்படுவது குறித்து பார்வையிட்டு, மேலும் பரிசோதனை முறைகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Related Stories:

More
>